வவுனியா வடக்கில் கடந்த சில வருடங்களாக அரச ஊழியர்களையும், பொது அமைப்புக்களின் நிர்வாகத்தினரையும் ஊடகம் என்னும் போர்வையில் அச்சுறுத்தி வருவதாக அரச ஊடகம் ஒன்றில் பிரதேச ஊடகவியலாளராக உள்ள ஒருவருக்கு எதிராக நெடுங்கேணி பிரதேச மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம் 11 மணிக்கு நெடுங்கேணி பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்றுள்ளது.
பொய்யான செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளரை உடன் நிறுத்து, எமது பிரதேசத்துக்கு தகுதியான ஊடகவியலாளரை நியமி,அரச ஊடகத்திலிருந்து நிறுத்து, எமது பிரதேசத்தில் ஊடக தர்மத்தை பேணும் ஊடகவியலாளர் வேண்டும் என்ற கோசங்களை எழுப்பி போராட்டகாரர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் இறுதியில் ஊடக அமைச்சுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் பிரதேச மக்களினால் கையெழுத்து இடப்பட்ட கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.
Mayurappriyan