ஹொங்கொங்கில் நடந்து வரும் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய ஆர்வலர் ஜோஷ்வா வாங் இன்று கைது செய்யப்படுள்ளார். ஹொங்கொங்கில் குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் அரசின் சட்ட திருத்தத்துக்கெதிராக கடந்த ஜூன் மாதம் முதல் கடுமையான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன
இதனையடுத்து சீன ராணுவத்தின் விமானப்படை, கடற்படை மற்றும் ராணுவம் ஆகிய முப்படைகளை சேர்ந்த 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான வீரர்களை உள்ளடக்கிய படைப்பிரிவு ஹொங்கொங் நகருக்குள் அணி வகுத்துள்ளது
இந்நிலையில் இன்று காலை இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கி செயற்பட்ட ஆர்வலர் ஜோஷ்வா வாங் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை ஜோஷ்வாவின் அரசியல் அமைப்பான டெமோசிஸ்டோ தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
இந்த போராட்டம் தொடங்கியது முதல் இதுவரை சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #ஹொங்கொங் #போராட்டத்துக்கு #தலைமை #கைது