எழிலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்று திறனாளிகள் 1000 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மாற்று திறனாளிகள் ஆணையாளராக சிவில் நீதிமன்ற நீதிபதி அந்தஸ்தில் இருப்பவரை நியமிக்க வேண்டும் என சட்டம் இருந்தும், இயக்குனர் அந்தஸ்தில் இருப்பவரே தமிழ்நாட்டில் பதவியில் இருப்பதாகவும், மாற்று திறனாளிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், இன்று மாற்று திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், மாற்று திறனாளிகள் உரிமை சட்டத்துக்கு விரோதமாக செயல்படும் அதிகாரிகளை கண்டித்தும் தலைமை செயலகத்தை முற்றுகையிடப் போவதாகக மாற்று திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவித்திருந்த நிலையில் இன்று காலை மாற்று திறனாளிகள் 1000 பேர் எழிலகத்தில் திரண்டு போராட்டம் மேற்கொண்டனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்று திறனாளிகளை வாகனத்தில் ஏற்றிய காவல்துறையினர் அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர்;. அவர்களை மாலையில் விடுவிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது #மாற்று திறனாளிகள் #கைது