சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமூக ஊடகமான டுவிட்டரின் இணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஜாக் டோர்சியின் டுவிட்டர் கணக்கில் இணையத்திருடர்; சட்டவிரோதமாக நுழைந்து 15 நிமிடங்கள் தொடர்ந்து மிகவும் ஆபத்தான, இனவெறி கருத்துகளை பதிவிட்டு விட்டுள்ளார்.
அவரது டுவிட்டர் கணக்கை 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்பற்றி வருகின்ற நிலையில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
இது குறித்து அறிந்ததும் உடனே நடவடிக்கை எடுத்து, பிரச்சினையை டுவிட்டர் நிறுவனம் சரி செய்து விட்டது. ஆனால் யார் இதனை மேற்கொண்டது இதற்கான பின்னணி என்ன என்பது தெளிவாக தெரியவில்லை.
இது தொடர்பில் செல்போன் சேவை நிறுவனத்தின் பாதுகாப்பு மேற்பார்வை குறைபாடுதான் இதற்கு காரணம் என டுவிட்டர் ஒரு அறிக்கையில் கூறி உள்ளது. #டுவிட்டர் #ஹக் #இனவெறி #பதிவு #ஜாக் டோர்சி