இந்து பௌத்த கலாச்சார பேரவையினால் 2ஆம் மொழி கற்கை நிலையம் நேற்று (02.09.67) அச்சுவேலியில் திறந்து வைக்கப்பட்டது.நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கற்கை நிலையத்தைத் திறந்து வைத்தார்.
பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அத்துரலிய தேரர், அச்சுவேலி புனிததெரசாள் மகளிர் கல்லூரியில் இருந்து மங்கள வாத்தியங்களுடன் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்து கலாச்சாரபேரவையின் வடமாகாண தலைமைக் காரியாலயமாக இந்த நிலையம் தொடந்து விளங்கும் என்பதுடன், ஏனைய மாவடங்களிலும் கிளைகள் திறந்து வைக்கப்படவுள்ளன.
நேற்று திறந்து வைக்கப்பட்ட இந்த நிலையத்தில் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகற்றைகைகள் மாணவர்களுக்கு இலவசமாக கற்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் இந்த நிலையம் ஊடாக 15 ஆயிரம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர் என்று நிலையத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மயூரப்பிரியன்