190
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் உள்ள ஓஎன்ஜிசிக்கு சொந்தமான எண்ணெய், எரிவாயு சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென ஆலையின் ஒரு பகுதியில் பற்றிய தீ ஏனைய இடங்களுக்கும் ; பரவியது.
இதனால் ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் இந்த தீ விபத்தில் 4 பேர் இறந்திருப்பதாகவும், 3 பேர் காயமடைந்திருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ஓஎன்ஜிசி #தீவிபத்து
Spread the love