266
மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இராசமடுப் பகுதியில் உள்ள மக்கள் மேட்டுநிலப் பயிர்ச் செய்கையில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். எனினும் கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக தோட்டப் பயிர்ச் செய்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த கிராமத்தில் அதிகளவான தோட்டங்களில் கத்தரிச் செடி பயிரிடப்பட்டுள்ளது. மழை இல்லாத காரணத்தால் கிணற்றில் இருந்து நீர் இறைப்பதன் மூலமே செடிகள் வளர்க்கப்படுகிறது.
ஆனால் செடிகளில் அதிகளவான பூக்கள் பூப்பதில்லை. செடியில் ஆகக் குறைந்தளவு காய்களே காணப்படுகிறது. இதற்கான காரணம் மழை இன்மையே. எவ்வளவுதான் நீர் இறைத்தாலும் இடையிடையே மழை பெய்ய வேண்டும். அப்போது தான் செடி பசுமையாகவும் அடர்த்தியாகவும் வளர்வதுடன் அதிகளவாக காய்க்கும் தன்மை கொண்டிருக்கும்.
தற்போது மழை இல்லாமல் வறட்சியாக நிலங்கள் இருப்பதால் ஒன்றை விட்டு ஒரு நாள் நீர் இறைக்கின்றோம் . செடி வளர்ச்சி குன்றி காய்கள் மிகவும் குறைவாகவே காணப்படுவதாகவும் வறட்சி காரணமாக கத்திரி செய்கை மிகவும் பாதிக்கப்படுவதாகவும் கத்திரி செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். #மன்னார் #வெப்பம் #வறட்சி #பாதிப்பு
-லம்பேர்ட்
Spread the love