வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய மஞ்சத் திருவிழா இன்று இடம்பெற்ற நிலையில் சக்கரம் ஒன்று இறுகியதால் அம்பாள் இடைநடுவே இறக்கப்பட்டு அடியவர்களின் தோளில் வீதியுலா வரும் நிலை ஏற்பட்டது. தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு மஞ்சத் திருவிழா நடைபெற்றது.
பிள்ளையார், அம்பாள் மற்றும் முருகப் பெருமான் மஞ்சத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தனர். இரவு 7.45 மணியளவில் ஆலயத்தின் மேற்கு வீதியில் மஞ்சம் வந்த நிலையில் அசைய மறுத்தது. அதனையடுத்து அடியவர்கள் கூடி முயற்சித்த போது மஞ்சத்தின் ஒரு சக்கரம் இறுகியதால் மஞ்சம் அசையவில்லை. அதனால் ஜேசிபி இயந்திரம் கொண்டுவரப்பட்டு முயற்சிக்கப்பட்ட போதும் மஞ்சம் ஓடவில்லை. அதனால் சுமார் ஒரு மணி நேரம் 45 நிமிடங்களின் பின் விநாயகப் பெருமான், அம்பாள், முருகப் பெருமான் இறக்கப்பட்டு அடியவர்களின் தோளில் வீதியுலா இடம்பெற்றது.