மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரின் மனைவி ரோசா எலினா பொனிலாவுக்கு 58 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது 52 வயதான பொனிலா அவரது கணவர் போர்பிரி ஒ லுபோ பதவியில் இருந்த நான்கு ஆண்டு காலப்பகுதியில் சர்வதேச நன்கொடை மற்றும் மக்கள் பணத்திலிருந்து 7,79,000 டொலர் மோசடி செய்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதனையடுத்து இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது பொனிலா இந்த பணத்தை நகைகள் வாங்கவும் மருத்துவமனைக்கு பணம் கட்டவும் தனது குழந்தைகளின் கல்விச் செலவுகளை செலுத்தவும் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் அவர் நிரபராதி எனவும் மேல் முறையீடு செய்வோம் எனவும் அவரது தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு பெப்பரவரி மாதம் மக்கள் பணத்தில் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட பொனிலா ஏழை குழந்தைகளுக்கு காலணி வழங்குவதற்கான வரவுசெலவுத்திட்டம் அமைத்ததிலும் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.