176
இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுகிறார் என்று வரும் செய்திகள் பொய்யானவை என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
எம்எஸ் தோனி, இருபதுக்கு 20 மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போகிறார், அந்த அறிவிப்பை வெளியிட செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தப்போகிறார் என செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எம்எஸ் தோனியின் ரசிகர்கள், அவர் ஓய்வுப் பெறக்கூடாது என உருக்கமாக ருவிட் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது . #தோனி #ஓய்வு #பொய்
Spread the love