Home உலகம் பிரேசிலில் மருத்துவமனையில் தீவிபத்து – 9 பேர் பலி – பலர் படுகாயம்

பிரேசிலில் மருத்துவமனையில் தீவிபத்து – 9 பேர் பலி – பலர் படுகாயம்

by admin

பிரேசில் நாட்டில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.  பாடிம் எனப்படும் குறித்த தனியார் மருத்துவமனையில் சுமார் 90 நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்ற நிலையில், நேற்றிரவு இவ்வாறு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதிலும் இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளதுடன் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்டமாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது #பிரேசில் #மருத்துவமனை #தீவிபத்து #பலி

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More