வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியராச்சிக்கு அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அதிகார சபைக்கு ஊழியர்களை இணைத்துக்கொண்ட போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து சாட்சியம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்படுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஊழியர்களை இணைத்துக்கொண்டதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என பெருந்தெருக்கள் அமைச்சராக கடமையாற்றிய லக்ஸ்மன் கிரியெல்ல ஆணைக்குழுவில் முறையிட்டிருந்ததனை கருத்திற்கொணடு ஆணைக்குழு ஏற்கனவே பல்வேறு நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண’;டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #வீதிஅபிவிருத்திஅதிகாரசபை #தலைவருக்கு #ஜனாதிபதிஆணைக்குழு #அழைப்பாணை