எழுக தமிழ்-2019ஊடக அறிக்கை14-09-2019முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைக்கப்பட்ட தமிழர் உடல்களோடு உடலாக, அனைத்துலக மனித உரிமை கோட்பாடுகளையும், வரையறைகளையும், நியமங்களையும், நம்பிக்கையினையும் சேர்த்தே புதைக்கபட்டுவிட்டதை இன்றளவும் மெய்ப்பிப்பதாகவே தமிழினப் படுகொலைக்கான நீதி தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றது.போர் வலயத்தில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்ற வேண்டும் என்று குரல் கொடுத்த சர்வதேச நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் நீதியைப் பெற்றுத் தருவதில் கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாது இருக்கின்றமையானது, தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானது என்ற கூற்றின் வழியே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட, இழைக்கப்பட்டுவரும் அநீதிகளுக்கான நீதியானது அனைத்துலக நாடுகளின் அரசியல், பொருளாதார, இராஜதந்திர நலன்களை முன்னிறுத்தி தாமதிக்கப்பட்டு வருவதன் வெளிப்பாடேயாகும்.இந்து சமுத்திர பிராந்தியத்தின் கேந்திரமாக அமையப்பெற்ற புவிசார் முக்கியத்துவத்தினை தமக்கு சாதகமாக்கி அனைத்துலக சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டுள்ளதோடு தமிழர்கள் மீதான கட்டமைப்புசார் இனவழிப்பை முழுவீச்சில் முன்னெடுத்து வரும் சிறீலங்கா அரசிற்கு மேற்கூறப்பட்ட புறநிலையானது மென்மேலும் ஊக்கத்தையே கொடுத்து வருகின்றது.இவ் நச்சு வட்டத்திலிருந்து எமக்கான நீதியை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் தமிழர்களாகிய நாம் தேசமாக அணிதிரண்டு ஒருமித்த குரலில் ஓங்கி ஒலிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதனை நன்குணர்ந்தே தமிழ் மக்கள் பேரவை ‘எழுக தமிழ்-2019’ எழுச்சிப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. தமிழ் மக்கள் தமது உரிமைக்கான போராட்டங்களை ஆரம்பித்திருந்த காலத்தைவிடவும், அதற்கான தேவையும், பரப்பும், நியாயமும் இன்று மிகப் பெரியதாகியுள்ளமையே இவ் எழுக தமிழுக்கான கதவினைத் திறந்துள்ளது.சரியான நேரத்தில் மிகச்சரியான முனைப்பாக தமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்படவிருக்கும் ‘எழுக தமிழ்-2019’ எழுச்சிப் பேரணி அமைந்துள்ளதென்பதை, அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து மற்றும் தமிழ்நாடு என தமிழர் பெரும்பரப்பில், யாழ் மண்ணில் நடைபெறும் சமகாலத்திலேயே ‘எழுக தமிழ்’ எனும் பெயரிலேயே ஆதரவுப் பேரணிகள் நடாத்தப்படவிருக்கின்றமை மீள் உறுதிசெய்து நிற்கின்றது. அத்துடன் ஜெனீவாவிலும் இனப்படுகொலைக்கான நீதி கோரி மாபெரும் எழுச்சிப் பேரணி செப்ரெம்பர் 16 அன்று நடைபெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.தாயகத்தில் வெளிப்படும் எழுகையானது தமிழர் பெரும்பரப்பில் மேற்கொள்ளப்படும் நீதிக்கான முன்னெடுப்புகளுக்கு பலம்சேர்ப்பதாக அமையும் என்பதனை இவ் எழுக தமிழ் மீண்டும் எடுத்தியம்பியுள்ளது. அந்த வகையில் வடக்கு கிழக்கு தழுவி தேசமாக தமிழர்கள் அணிதிரளும் எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணியானது தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு முன்னகர்த்திர்த்திச் செல்லும் என்ற அடிப்படையில் மாபெரும் எழுச்சி பிரவாகமாக இவ் எழுகதமிழை மேற்கொள்வதற்கான பூரண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.வடக்கு கிழக்கு தழுவியதாக தமிழர் தாயகமெங்கும் எழுக தமிழுக்கான ஆதரவு பல்வேறு தளங்களில் இருந்தும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவ் ஆதரவுத்தளத்தினை ஒருங்கிணைத்து எழுக தமிழை பேரெழுச்சியுடன் முன்னெடுக்க ஏதுவாக வடக்கு கிழக்கு தழுவியதான பூரண கதவடைப்பிற்கு எம்மால் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் கடற்றொழிலாளர்கள் பங்கேற்கும் வகையில் அன்றைய தினத்தில் தொழில் நிறுத்தம் செய்யுமாறு சம்மேளனத்தின் சார்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகளும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியுள்ளன.தாயகம் தழுவியதாக வருகையினை உறுதிசெய்திருக்கும் அமைப்புகளிற்கான வாகன ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. தன்னெழுச்சியாக வருபவர்களையும் எழுக தமிழ் நிகழ்வில் பங்கேற்கச் செய்யும் வகையில் பொதுவான போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இனமான உணர்வுடன் தமிழர்கள் அனைவரும் எழுக தமிழ் நிகழ்விற்கு அலைகடலென திரண்டு வருமாறு உரிமையுடன் அழைப்பு விடுக்கின்றோம்.கிழ்வரும் மக்கள் அமைப்பினர் எழுக தமிழ்-2019 இற்கு தமது பூரண ஆதரவினை வழ்கியுள்ளார்கள். யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் யாழ் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் யாழ் பல்கலைக் கழக ஊழியர் சங்கம் கிழக்கு பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் மன்னார் பிரஜைகள் குழு தமிழர் மரபுரிமைப் பேரவை தென் கயிலை ஆதீனம் – குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் நல்லை ஆதீனம் – குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் யாழ். சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் பிரம்மச்சாரி சிதாகாசானந்தா சர்வதேச இந்து குருமார்கள் ஒன்றியம் – வணக்கத்திற்குரிய சிவஸ்ரீ கலாநிதி து.கு.ஜெகதீஸ்வரக் குருக்கள் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் – ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் மட்டக்களப்பு மாவட்ட இந்து மத குருமார்கள் ஒன்றியம் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கம் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் வட மாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் பளை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் கண்டாவளை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் யாழ்ப்பாண பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் காரைநகர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் நெடுந்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் வேலனை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் வலிகாமம் வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் வலிகாமம் தென் மேற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் இச்சமாசங்களுக்குட்பட்ட 150 இற்கு மேற்பட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் யாழ் பிராந்திய கூட்டிணைக்ப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணையம் அச்சுவேலி சிற்றூர்திகள் சேவை சங்கம் வடமராட்சி சிற்றூர்திகள் சேவை சங்கம் வவுனியா மாவட்ட பொது அமைப்புகள் மன்னார் மாவட்ட பொது அமைப்புகள் சமூக விஞ்ஞான ஆய்வு மைய்யம் வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு யாழ்-மாதகல்(787) சிற்றூர்திகள் சேவை சங்கம் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனம் மன்னார் சமூக வளர்ச்சியின் மாற்றம் அமைப்பு வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சுனுளு மற்றும் றுசுனுளு சமாசம் யாழ் சிகை அலங்கரிப்பாளர் சங்கம் வடமராட்சி சிகை அலங்கரிப்பாளர் சங்கம் தென்மராட்சி சிகை அலங்கரிப்பாளர் சங்கம் மன்னார் நகர வர்த்தக சங்கம் கிளிநொச்சி வர்த்தக சங்கம் வவுனியா வர்த்தக சங்கம் யாழ் வணிகர் கழகம் நெல்லியடி வர்த்தக சங்கம் பருத்தித்துறை வர்த்தக சங்கம் கொடிகாமம் வர்த்தக சங்கம் சாவகச்சேரி வர்த்தக சங்கம் சுன்னாகம் வர்த்தக சங்கம் சங்கானை வர்த்தக சங்கம் மானிப்பாய் வர்த்தக சங்கம் யாழ் மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் நெல்லியடி சந்தை வியாபாரிகள் திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் தெல்லிப்பளை ப.நோ.கூ.சங்கம்இவற்றுடன் வடக்கு கிழக்கு மாகாணங்களிற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கங்கங்கள், மாதர் சங்கங்கள், கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள், சமூகமட்ட அமைப்புகள், தொழிற்சங்கங்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஆகிய தரப்பினர் எழுக தமிழ்-2019 நிகழ்விற்கு தமது ஆதரவினை வழங்கியுள்ளார்கள். அத்துடன் தாய்த்தமிழ் நாட்டில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் முழுமையான ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.இதற்கு மேலதிகமாக தமிழர் தாயகத்தில் இருந்து செயற்படுகின்ற தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டத்தையும், எழுக தமிழ் கோசங்களையும் ஏற்றுகொண்ட பெரும்பாலான கட்சிகளும் தமது பூரண ஆதரவினை தெரிவித்துள்ளன.வாகன ஒழுங்குகள் தொடர்பான விபரங்கள்.மன்னார் – ராஜா 0767089338வவுனியா – சிறிதரன் 0777908617வடமராட்சி – சிவகுமார் 0774521392வடமராட்சி கிழக்கு – காண்டீபன் 0761660414வலிகாமம் – சரவணன் 0777243129வலிகாமம் கிழக்கு – உதயகுமார் 0773024487ஏனைய இடங்களுக்கு மேலதிக விபரங்களுக்கும் – 0760025080போக்குவரத்து சேவையின் நேரங்களும் வழித்தடங்களும்பருத்தித்துறை பேருந்து நிலையத்தரில் இருந்து (750 வழித்தடத்தில்)காலை 7.30 மணிகாலை 8.00 மணிதொடர்பிற்கு – சிவகுமார் 0774521392கொடிகாமம்-சாவகச்சேரி-கைதடி ஊடாக யாழ்ப்பாணம்காலை 7.30 மணிகாலை 8.00 மணிதொடர்பிற்கு – 0776186554மாவிட்டபுரம்-சுன்னாகம்-மருதனார்மடம்-கொக்குவில் ஊடாக யாழ்ப்பாணம்காலை 7.30 மணிகாலை 8.00 மணிதொடர்பிற்கு – சரவணன் 0777243129மூளாய்-சுழிபுரம்-சித்தன்கேணி-சங்கானை-மானிப்பாய்-யாழ்ப்பாணம்காலை 7.30 மணிதொடர்பிற்கு – சரவணன் 0777243129கேவில்-ஆழியவளை-உடுத்துறை-வத்திராயன்-மருதங்கேணி குடியிருப்பு வீதிகள் ஊடாக புதுக்காடு-யாழ்ப்பாணம்காலை 6.00 மணிதொடர்பிற்கு – காண்டீபன் 0761660414மருதங்கேணி சந்தி-செம்பியன்பற்று தெற்கு-செம்பியன்பற்று வடக்கு-மாமுனை வடக்கு-மாமுனை சந்தி-நாகர்கோவில் வடக்கு ஊடாக யாழ்ப்பாணம்காலை 6.30 மணிதொடர்பிற்கு – காண்டீபன் 0761660414அம்பன் மருத்துவமனை-பொற்பதி-குடத்தனை வடக்கு-மணற்காடு-வல்லிபுரம்-யாழ்ப்பாணம்காலை 7.00 மணிதொடர்பிற்கு காண்டீபன் – 0761660414ஊடகப்பிரிவுஎழுக தமிழ்-2019தமிழ் மக்கள் பேரவை14.09.2019
14.09.2019
தமிழ் மக்கள் பேரவையால் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும், 16 201செப்டம்பர் 2019 அன்று நடைபெறவிருக்கும் ‘எழுக தமிழ்’ பேரணிக்கு தமிழ் சிவில் சமூக அமையம் தனது ஆதரவை வழங்குகின்றது.
எழுக தமிழ் பேரணி இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அடக்குமுறைகள் தொடர்பில் எமது எதிர்ப்பை காட்டுவதற்கும் நீதிக்கான அவாவை வெளிப்படுத்தும் நோக்கத்திற்காகவும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாலும் அரசியலில் வெகுசன அணிதிரட்டலை சாதித்தியப்படுத்துவதன் முக்கியத்துவம் கருதியும் நாம் மனப்பூர்வமாக எமது ஆதரவை இம்முயற்சிக்கு அளிக்கின்றோம்.
தேர்தல் அரசியல் தொடர்பிலும் அதில் இயங்கும் தரப்புக்களின் செல்நெறி தொடர்பிலும் தமிழ் மக்கள் மிகவும் சோர்வடைந்து போய் உள்ளனர். மக்கள் பிரதிநித்துவ அரசியலை தாண்டிய ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் இயக்கத்தையும் நிகழ்ச்சித்திட்டத்தையும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த நோக்கங்களுக்காகவே தமிழ் சிவில் சமூக அமையம் பேரவையின் உருவாக்கத்தில் பங்கெடுத்தது. தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கமாக பரிமாணிப்பதும் தேர்தல் அரசியல் கடந்து அரசியல் பணி ஆற்றுவதுமே அதனது வரலாற்று வகிபாகமாக இருக்க முடியும். அதற்கு பேரவை தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றும் அத்தகைய முயற்சிக்கு எமது முழு ஆதரவுண்டு என்பதையும் ஆணித்தரமாக வெளிப்படுத்துகிறோம்.
எழுக தமிழின் வெற்றிக்கும் அதனைத் தாண்டிய அணிதிரட்டலுக்கும் எமது முழுமையான ஆதரவும் தோழமையும்.
கலாநிதி. கு. குருபரன்,
இணைப் பேச்சாளர்கள்,
தமிழினமாக’எழுகதமிழ்’பேரணியில் பேதங்கள் மறந்துபேரெழுச்சியுடன் பங்கேற்போம்!
ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் சிக்கனகடனுதவு கூட்டுறவுச் சங்கம்
தமிழ் மக்கள் பேரவையால் வரும் 16ஆம் திகதியாழ் மண்ணில் முன்னெடுக்கப்படவிருக்கும் ‘எழுகதமிழ்’எழுச்சிப் பேரணியில் தமிழ் இனம் என்றரீதியில் எழுகதமிழ் பேரணியில் பேதங்கள் மறந்துபேரெழுச்சியுடன் பங்கேற்கவேண்டுமென,ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் சிக்கனகடனுதவு கூட்டுறவுச் சங்கம் அழைப்புவிடுத்துள்ளது.
தமிழ் சமுகத்தின் இருப்பினை இழந்துசொல்லொனாத் துயரைஅனுபவித்தபடிகொண்டிருக்கின்ற இத்தருணத்திலேயாழ் மண்ணில் ‘எழுகதமிழ் – 2019’பெருநிகழ்வுநடைபெறவுள்ளது. எல்லாத் தமிழர்களும் தமிழ் இனம் என்றரீதியிலேநாங்கள் ஒற்றுமைஉணர்வுடன் சகலபேதங்களையும் மறந்துபேரெழுச்சியுடன் பங்குபற்றவேண்டியதுதமிழர்களாகியஎமதுகடமையாகும்.
வடகிழக்கில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்றதுன்பகரமற்றும் தீர்க்கப்படவேண்டியவாழ்வாதாரபிரச்சினைகளைமுன்வைத்துநடாத்தவிருக்கின்றபொதுமக்கள் எழுச்சிப் பேரணியிலேதமிழன் என்றசொல்லிற்குஅர்த்தம் கொடுக்கநினைக்கும் ஒவ்வொருதமிழனும் இந்நிகழ்விலேபங்கேற்கவேண்டும். எங்களதுவருங்காலசந்ததியின் இருப்பினைஉறுதிப்படுத்த இந்நிகழ்விலேபங்குபற்றவேண்டும் எனவேண்டுகோள் விடுக்கின்றது.
தமிழினமாக’எழுகதமிழ்’பேரணியில் பேதங்கள் மறந்துபேரெழுச்சியுடன் பங்கேற்போம்! மட்டக்களப்புமாவட்டசிவில் சமூகம் அழைப்பு!
தமிழ் மக்கள் பேரவையால் வரும் 16ஆம் திகதியாழ் மண்ணில் முன்னெடுக்கப்படவிருக்கும் ‘எழுகதமிழ்’எழுச்சிப் பேரணியில் தமிழ் இனம் என்றரீதியில் எழுகதமிழ் பேரணியில் பேதங்கள் மறந்துபேரெழுச்சியுடன் பங்கேற்கவேண்டுமென,மட்டக்களப்புமாவட்டசிவில் சமூகம் அழைப்புவிடுத்துள்ளது.
தமிழ் சமுகத்தின் இருப்பினை இழந்துசொல்லொனாத் துயரைஅனுபவித்தபடிகொண்டிருக்கின்ற இத்தருணத்திலேயாழ் மண்ணில் ‘எழுகதமிழ் – 2019’பெருநிகழ்வுநடைபெறவுள்ளது. எல்லாத் தமிழர்களும் தமிழ் இனம் என்றரீதியிலேநாங்கள் ஒற்றுமைஉணர்வுடன் சகலபேதங்களையும் மறந்துபேரெழுச்சியுடன் பங்குபற்றவேண்டியதுதமிழர்களாகியஎமதுகடமையாகும்.
வடகிழக்கில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்றதுன்பகரமற்றும் தீர்க்கப்படவேண்டியவாழ்வாதாரபிரச்சினைகளைமுன்வைத்துநடாத்தவிருக்கின்றபொதுமக்கள் எழுச்சிப் பேரணியிலேதமிழன் என்றசொல்லிற்குஅர்த்தம் கொடுக்கநினைக்கும் ஒவ்வொருதமிழனும் இந்நிகழ்விலேபங்கேற்கவேண்டும். எங்களதுவருங்காலசந்ததியின் இருப்பினைஉறுதிப்படுத்த இந்நிகழ்விலேபங்குபற்றவேண்டும் எனவேண்டுகோள் விடுக்கின்றது.
நமக்கான தலைவிதியை நாமே தீர்மானிக்க தேசமாக எழுவோம் ! எழுகதமிழ் எழுச்சிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவுகின்றது !!
நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான எமது போராட்ட வேட்கையில் நமக்கான தலைவிதியை நாமே தீர்மானிக்கும் வகையில், நமது அறவலிமையினை அரசியல் வலிமையாக மாற்ற, எழுகதமிழாய் எழுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுக்கின்றது.
எதிர்வரும் செப்ரெம்பர் 16ம் நாள், யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெறுகின்ற எழுகதமிழ் எழுச்சி நிகழ்வில் தேசமாக தாயக உறவுகள் பங்கெடுத்து, மக்கள் சக்தியின் வலிமையினை உலகிற்கு உரத்து ஒலிக்க வேண்டுகின்றோம்.
தாயக மக்களின் போராட்டத்திற்கு வலுவூட்ட நியு யோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்னேயும், தமிழ்நாட்டிலும் எழுகதமிழாக அணிதிரளும் நாம், சமவேளை ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபை முன்றலிலும் ஒன்றுகூடுகின்றோம்.
தமக்குள்ள ஜனநாயக வெளியில் தமக்கான கோரிக்கைகளுடன் உலக மக்கள் உறுதியுடன் ஜனநாயகப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். பிரான்சின் மஞ்சள் அங்கிப் போராட்டம், அரபு வசந்தத்தின் மக்கள் போராட்டம், சமகாலத்தில் கொங் கொங்கில் எழுந்துள்ள மக்கள் போராட்டம் என யாவுமே மக்கள் போராட்டங்களுக்கு வலிமையுண்டு என்பனை உலகிற்கு மீண்டுமொருமுறை வெளிக்காட்டி வருகின்றன. தேர்தல் ஜனநாயகப்பாதையில் ஏற்படும் குறைகளைக், களையும் வகையில் மக்களின் நேரடி ஜனநாயகப் போராட்டங்களினால் அரசின் தீர்மானங்களின்மேல் காத்திரமான அழுத்தம் கொண்டுவர முடியும் என்பதையும் இப்போராட்டங்கள்; உணர்த்தி நிற்கின்றன.
ஈழத்தமிழர் தேசமும், தனது நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான போராட்டத்தினை வென்றடைய, நேரடி ஜனநாயகப் போராட்டங்களில் தன்னை எழுச்சியுடன் ஈடுபடுத்த வேண்டிய காலமாக இது உள்ளது என நமது புத்தாண்டுச் செய்தியில் அறைகூவியிருந்தோம்.
முள்ளிவாய்க்காலின் பின்னரான இப்பத்து ஆண்டுகளில் அனைத்துலக அரசுகளின் உதவியுடன் தனது தமிழின அழிப்புக்கான பொறுப்புக்கூறலில் இருந்தும், அதற்கான பரிகாரநீதியினை வழங்குவதில் இருந்தும் சிறிலங்கா அரசு தப்பித்து வருவதோடு, தமிழர்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்குமான போராட்டத்தினை நீர்த்துப் போகச் செய்கின்ற பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகின்றது.
சிறிலங்கா அரசாங்கங்கள் எவையாக இருந்தாலும் தமிழின அழிப்பையோ, அல்லது தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசம் என்பதனையோ ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இதனால் தமிழ் மக்கள் சிங்கள அரசாங்கங்களின் நிலைப்பாட்டை எதிர்த்து தொடர்ச்சியாக விட்டுக் கொடுப்பற்ற போராட்டத்தை நடாத்துவது தவிர்க்க முடியாத வரலாற்று நிரப்பந்தமாக ஈழத்தமிழர் தேசத்துக்குள்ளது.
நாம் ஒன்றுபட்டவர்களாக, ஒருமித்தவர்களாக ஒற்றுமையுடன் அணிதிரளும் போது, இலங்கைத்தீவினை மையப்படுத்திய சர்வதேச புவிசார் அரசியலில் நம்மையும் ஒரு தரப்பாக வலுப்படுத்துவதற்குரிய அரசியல் சக்தியினைப் பெறமுடியும். தாயக மக்கள், புலம்பெயர் மக்கள், தமிழ் நாட்டு உறவுகள் என உலகத்தமிழர்கள் அனைவரும் ஒற்றைக்குரலாக அணிதிரண்டு எமக்கான சக்தியினை வலுப்படுத்த வேண்டிய காலமாகவுள்ளது.
சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு உட்பட்ட தேர்தல் அரசியல் பாதையில் பயணித்து வரும் தாயக தமிழர் அரசியற்தரப்புக்களது முரண்பாடுகளுக்கு அப்பால், ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்தின் அற வலிமையினை அரசியல் வலிமையாகவும், அறிவு வலிமையாகவும் மாற்ற, நாம் அனைவரும் ஒற்றைக்குரலாக ஒலிப்போம்.
தேசமாக நாம் அனைவரும் எழுகதமிழில் பங்கெடுத்து நமக்கான தலைவிதியை நாமே தீர்மானிக்க, நீதிக்கும் சக்தியாக மாறுவோம்.
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு
அனைத்து தமிழ் மக்களும், ஓரணியாய் அலைகடலென திரண்டு எழுக தமிழில் பங்கேற்க அழைக்கின்றோம்
———————————————————————-
எழுக தமிழ் காலத்தின் தேவை அதை வெல்ல வைக்க வேண்டியது தமிழர்களின் கடமை எனவே அனைத்து தமிழ் மக்களும் ஓரணியாய் அலைகடலென திரண்டு எழுக தமிழில் பங்கேற்க அழைக்கின்றோம்.
எக்காலத்திலும் மாறாத சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஆதிக்க மனப்பான்மை ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையிலும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை வேறு வடிவங்களில் முன்னெடுத்து தமிழர் நிலங்களையும், கடலையும், வளங்களையும் கபளீகரம் செய்வதோடு தமிழர் தேசம் எங்கும் அரச இயந்திரத்தின் துணையுடன் திட்டமிட்ட குடியேற்றங்களையும் சிங்கள பௌத்த மயமாக்கலையும் முன்னெடுத்து வருகின்றது.
தமிழர் கல்வி, கலாச்சாரம், பண்பாடு என்பவற்றை சிதைக்கும் மறைமுக நிகழ்ச்சிநிரல்களிற்கு அரச இயந்திரம் துணைநிற்கின்றது. வேலைவாய்ப்புக்களில் பிரதேச மக்களிற்கு முன்னுரிமை வழங்காது இனப்பரம்பலை மாற்றியமைக்கும் மறைமுகத் திட்டத்தில் உரிய தகுதிகள் இன்றி மாற்றினத்தவரை தமிழர் பிரதேசங்களில் வேலைகளில், பதவிகளில் அமர்த்தும் கைங்கரியங்களில் மத்திய அரசு செயற்படுகின்றது. போர் காரணமாக சொந்த இடங்களைவிட்டு இடம்பெயர்ந் தமிழர்களை அவர்களின் பூர்வீக நிலங்களில் குடியமர்த்த முற்படாது அப்பூர்வீக நிலங்களில் இராணுவ பௌத்த நிலைகளை நிறுவுவதில் அக்கறைகாட்டுகின்றது.
எனவே இவற்றையெல்லாம் எதிர்க்கவும், சர்வதேசத்திற்கும், ஜனநாயக போர்வையில் கண்மூடி மௌனித்திருக்கும் ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களிற்கும் தமிழர் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே குரலில் உரத்துச் சொல்ல வேண்டியது காலத்தின் அவசியமும், தமிழரின் இருப்பிற்கு அவசியமும் ஆகும்.
அந்த வகையில் தமிழ் மக்கள் பேரவையால் வரும் செப்டம்பர் 16 ஆம் திகதி யாழ் மண்ணில் முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 எழுச்சி நிகழ்விற்கு அனைவரையும் அணிதிரண்டு பங்கேற்க பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அழைப்பு விடுக்கின்றது.
அத்துடன் செப்டம்பர் 16 எழுக தமிழ் நிகழ்வில் அனைவரும் பங்கேற்கும் வகையில் தமிழர் தாயகம் தழுவிய ரீதியில் விடுக்கப்பட்டுள்ள வழமை மறுப்பிற்கும் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆதரவு வழங்குகின்றது.
பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்
எங்கள் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் எழுக தமிழில் ஒன்றிணைவோம்! சுவாமி சிதாகாசானந்தா!
தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்திருக்கும் எழுக தமிழ் நிகழ்வில் பங்கேற்று எங்கள் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் எழுக தமிழில் ஒன்றிணைவோம் என யாழ் சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் பிரம்மச்சாரி சிதாகாசானந்தா சுவாமி அவர்கள் எழுக தமிழுக்கு ஆதரவாக விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளார். அப்பதிவில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்திருக்கும் எழுக தமிழ் நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தமிழர்களாகிய எங்களுடைய தேவைகளையும், எங்களுடைய உரிமைகளுக்கான குரல்களையும் எடுத்துச் செல்லுகின்ற ஒரு நிகழ்வாக மக்கள் இயக்கமாகிய தமிழ் மக்கள் பேரவை எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை முன்னெடுத்திருக்கின்ற இந்த எழுக தமிழுக்கு அனைத்து தமிழர்களும் எந்தவித கட்சி பேதமுமின்றி வேறு எந்த பேதங்களுமின்றி இந்த நிகழ்விலே கலந்துகொள்ள வேண்டும்.
நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்களுடைய தேவைகளையும், வேண்டுதல்களையும் முழு உலகத்திற்கும் தெரியப்படுத்தும் பொழுதான் நிச்சயமாக எங்கள் இலக்கை அடைய முடியும். மக்கள் எழுச்சியின் மூலமாகத்தான் உரிமைகள் வென்றெடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையிலேயே தமிழ்த்தேசிய சிந்தனையிலேயே இந்த எழுக தமிழ் நிகழ்வில் அனைவரும் வந்து பங்குபற்றவேண்டிய நிகழ்வாக இருக்கின்றது.
எழுக தமிழ் நிகழ்வில் பங்குபற்றுவதன் ஊடாக எங்களுடைய விடுதலையை, எங்களுடய உரிமைகளை உலகிற்கு வெளிப்படுத்த முடியும். அந்தவகையில் அரசியல் தலைவர்கள் மற்றும் ஆன்மீகத் தலைவர்களாகிய நாங்களும் இவ் எழுக தமிழ் மக்கள் எழுச்சிப் பேரணியில் முழுமையாக இணைந்திருக்கின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார்.
ஊடகப்பிரிவு
எழுக தமிழ்-2019
தமிழ் மக்கள் பேரவை
எழுக தமிழ் பேரணியில் ஒன்றாய் அணிதிரள உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம் – கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம்
இன்றைய அரசியல் சூழலில் தமிழ் மக்களின் எழுச்சிப் போராட்டங்கள் முதன்மையடைய வேண்டியது காலத்தின் தேவையாகும். கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியமானது தமிழ் தேசிய நீதிப் போராட்டங்களிற்கு தன்னாலான பங்களிப்பை என்றுமே வழங்கி வருகின்றது. ஈழத் தமிழர்களின் மிகப் பெரும் நீதிக்கான குரலான எழுக தமிழிற்கு காலத்தின் தேவை உணர்ந்து நாம் பரிபூரண ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்குகின்றோம்.
யுத்தத்திற்கு முன்னரும், தற்போதும்; இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக அரங்கேற்றுகின்ற துரோகங்களுக்கு ஈழத்தமிழர்கள் நாம் ஒன்றாய் குரல் கொடுக்காமையே இன்றைய எமது இந்நிலைக்குக் காரணமாகும். தமிழ்த் தேசியத்தில் பல கட்சிகளாய் பிளவுபட்டு நிற்கையில் நாம் நீதியினை வென்றெடுப்பது எட்டாக் கனியாகத்தான் இருக்கின்றது. தமிழர்களாகிய எங்களுக்குள் இருக்கும் நீண்ட இடைவெளிகளை தகர்த்தெறிவதாக எழுக தமிழ் நிகழ்வில் தமிழர்கள் நாம் அனைவரும் ஒரே தமிழ்த்தாய் பிள்ளைகளாய் ஒன்றிணைவோம். மூலை முடுக்குகளில் வாழும் தமிழர் மனங்களில் உறங்கிக் கிடக்கும் நீதிக்கான உணர்வுகளுக்காக, தட்டிக் கேட்கும் தன்மைக்காக அனைத்து தமிழர்களும் குரல் கொடுக்கும் அறவழிப் போராட்டமாய் எழுக தமிழ் பரிணமிக்க காத்திருக்கிறது.
இலங்கை அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளில் எம் தமிழ் தலைமைகள் விலை போவது வேதனையளிக்கிறது. மாற்றத்தினை வேண்டி நிற்கும் எழுக தமிழில் நாம் கேட்பது தமிழர்களுக்கான நீதியைத்தான். வட கிழக்கில் திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்புக்கள், தமிழ்களின் இன்றைய மற்றும் எதிர்கால இருப்பினைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது;, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, போர் குற்ற விசாரணை, அரசியல் கைதிகளின் விடுதலை என பல விடயங்களில் இன்றும் இலங்கை அரசாங்கம் நீதியைத் தர மறுக்கின்றது.
மாணவர் நாம் மிகப் பெரும் சக்தியாய் எழுக தமிழில் பங்கேற்க கடமைப்பட்டுள்ளோம். பேரணியின் சாதகமான பெறுபேறு, தமிழனின் விடியலுக்கானது. எமக்கு இழைக்கப்பட்ட துரோகங்களை மீண்டும் ஒரு முறை சர்வதேசத்திற்கு கூறிட இதுவே தகுந்த தருணமாகும். எனவே தமிழர்களின் உரிமைகளினை வென்றெடுக்க கரம் சேர்க்கக் காத்திருக்கும் அனைத்து தமிழ் உறவுகளையும் புரட்டாதி 16 அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமாகும் எழுக தமிழ் பேரணியில் ஒன்றாய் அணிதிரள உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி.
தமிழர் தாயகத்தில் செப்டம்பர் 16ம் தேதி நடக்கும் எழுக தமிழ்2019 நிகழ்வை, வெறும் அரசியல் நிகழ்வாக நாங்கள்பார்க்கவில்லை. ஒட்டுமொத்தத் தமிழினத்தின் உரிமைக்குரலை உலகதிர எடுத்துரைக்கும் அரிய நிகழ்வாகவேபார்கிறோம். எந்த மண்ணில் இன அழிப்பு நடந்ததோ அந்த மண்ணிலிருந்து நீதிக்கான முழக்கம் எழுவது, ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைக்கும் என்று உறுதியாக நம்புகிறோமென என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
10 ஆண்டுகள் இழுத்தடித்துவிட்டால், தமிழினம் நம்பிக்கையிழந்து விடும் என்று தப்புக் கணக்குப்போட்டவர்களுக்குப் பாடம் கற்பிப்பதாக யாழ் முற்றவெளியில் நடக்கும் எழுக தமிழ் நிகழ்வு அமைய வேண்டும். எழுக தமிழ்பேரணியின் வெற்றி, ஒட்டுமொத்தத் தமிழினத்தின்வெற்றியாகத் திகழ வேண்டும்.
நாம் பீனிக்ஸ் பறவைகள். சாம்பலிலிருந்து கூட உயிர்த்தெழுகிற வல்லமை படைத்தவர்களென்பதை எழுக தமிழ் வாயிலாக அதை உறுதி செய்வோம்!
கோடானு கோடி தமிழரின் நெஞ்சங்களிலிருந்து, முள்ளிவாய்க்கால் நினைவு மறையவேயில்லை. அது ஒருக்காலும் மறையாது. நீறுபூத்த நெருப்பாக நீதிக்கானஅறஞ்சார் சினம் நமக்குள் கனன்றுகொண்டே இருக்கிறது. தமிழரின் தாய்மண் அதை நிரூபிக்கும் என்ற முழுமையான நம்பிக்கையோடுதான், சென்னையிலும் எழுக தமிழ் நிகழ்வை எழுச்சியுடன் நடத்த முழுமூச்சில் வேலை செய்து வருகிறோம்.
யாழ் மண்ணில் பேரணி நடக்கிற அதே நாளில் அதே நேரத்தில்சென்னை வள்ளுவர் கோட்டத்தில், எழுக தமிழ் ஒன்று கூடலை, இனப்படுகொலைக்கு எதிரான பொதுவானஅமைப்புகளுடன் இணைந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்பேரவை நடத்துகிறது.
எங்கள் தொப்புள் கொடி உறவுகளின் போர்க்குரலோடு சேர்ந்து எங்கள் குரலும் ஒலிக்க வேண்டும், தமிழகம் தமிழீழ மக்களுடன் இணைந்தே நிற்கிறது என்பதை உலகுக்குஉணர்த்த வேண்டும் என்கிற நோக்கத்துடன்தான் களத்தில் இறங்கியிருக்கிறோம் நாங்கள். அரசியல் மாறுபாடுகளைக் கடந்து, சென்னை எழுக தமிழ் நிகழ்வில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கஇருப்பதைப் பெருமையுடன் சுட்டிக்காட்ட வேண்டியது எனதுகடமையாகிறது.
எங்கள் தொப்புள்கொடி உறவுகளுக்காக, சென்னையில்நாங்கள் வீதிக்கு வருகிறோம்!
ஒன்றுபட்டு ஒலிக்கிற தமிழினத்தின் குரல், இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத் தருமென்ற நம்பிக்கையோடு கை கோர்க்கிறோம்!
தமிழர் தாயகமான தமிழீழத்தில் நடந்த அகிம்சைப்போராட்டங்களிலும் சரி, ஆயுதப் போராட்டங்களிலும் சரி, அறம்சார் நெறிகளுடன்தான் தமிழினம் களம் கண்டிருக்கிறது. இப்போது, நீதி கோரி நிகழ்த்தும் போரிலும் நெறி பிறழாமல்தான் நிற்கிறோம் உறுதியுடன்!
நீதியும் நேர்மையும் நிரந்தரமாகத் தோற்றதாய் வரலாறில்லை….
குனிந்து வளைந்தது நிமிர்ந்து எழுவதற்காகத் தான் என்பதைநாம் பறைசாற்றியாக வேண்டும்…..
தமிழர் தாயகத்தின் குரல் செப்டம்பர் 16ம் தேதி யாழ்முற்றவெளியில் ஓங்கி ஒலிக்கட்டும்!
அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் – என்கிற காப்பியவரிகளுக்கு உயிரூட்டுவதாக, ஓங்கி ஒலிக்கிற முழக்கங்கள்அமையட்டும்!
யாழ் மண்ணில் மட்டுமல்ல….
தமிழகத்தின் தலைநகரிலும் எழுகிறோம் தமிழராய்!
தமிழைத் தொழுவோம்; தமிழராய் எழுவோம்!
இவ்வாறு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் அதன் தலைவர் த.வெள்ளையன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகப்பிரிவு
எழுக தமிழ்-2019
தமிழ் மக்கள் பேரவை
எழுக தமிழுக்கு தென்மராட்சி பொது அமைப்புகள் பூரண ஆதரவு!
தமிழ் மக்கள் பேரவையால் வரும் 16 ஆம் திகதி யாழ் மண்ணில் முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 எழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவுகோரி தென்மராட்சி பகுதி பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் தமிழ் மக்கள் பேரவையினர் மேற்கொண்டிருந்த சந்திப்பையடுத்து எழுக தமிழுக்கு பூரண ஆதரவினை வழங்குவதென ஏகமனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி டச் வீதியில் அமைந்துள்ள மண்டபமொன்றில் நேற்று(12.09.2019) மாலை 4.30 மணிக்கு நடைபெற்றிருந்த இச்சந்திபில், ஒன்றுபட்ட தேசமாக தமிழர்கள் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் பங்கேற்று பலப்படுத்துவதன் அவசியம் குறித்தும் முன்னாயத்த ஏற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டிருந்தது.
தென்மராட்சி பிரதேசத்திற்குட்பட்ட வர்த்தக சங்கங்கள், சிற்றூர்திகள் சேவைச் சங்கம், கடற்றொழிலாளர் சங்கங்கள், சிகை அலங்கரிப்பாளர் சங்கம், மாதர் சங்கங்கள்
உள்ளடங்கிய பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் என சுமார் ஐம்பதிற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்ற இக்கலந்துரையாடலின் முடிவில் தென்மராட்சி பகுதிக்குட்பட்ட வர்த்தக நிலையங்களை மூடி ஒத்துழைப்பு வழங்குவதுடன் எழுக தமிழுக்கு பூரண ஆதரவினை வழங்குவதெனவும் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஊடகப்பிரிவு
எழுக தமிழ்-2019
தமிழ் மக்கள் பேரவை
1 comment
“நாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் வட மாகாணப் பாடசாலைகள் அனைத்தும் வழமை போல் இயங்கும் என்று ஆளுநர் சுரேன் ராகவன் இன்று (14) தெரிவித்துள்ளார்” – Uthayan. இவரின் கோரிக்கையை புறக்கணித்து அனைத்து தமிழர்களும் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்.