189
மாந்தை மேற்கு குறிஞ்சாக்குளம் அருள் மிகு அம்பாரவேல் பிள்ளையார் கோவில் மஹா கும்பாபிசே பெருஞ்சாந்திப் பெருவிழா நாளை திங்கட்கிழமை (16) காலை 10 மணிக்கு ஆலய போசகரும்,மாந்தை மேற்கு பிரதேச் செயலாளருமான எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இடம் பெறவுள்ளது.
குறித்த பெருவிழாவிற்கு விருந்தினர்களாக நல்லை ஆதின குரு முதல்வர் சோம சுந்தர தேசிக ஞானசம்மந்த பரமச்சார்ய சுவாமிகள், வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ்,இராணுவ 54 ஆவது படைப்பிரிவு அதிகாரி பிரிக்கேடியர் ஏ.ஏ.ஜே.பண்டார உற்பட பலர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
-மன்னார் நிருபர்-
Spread the love