166
மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ மாநிலத்தில் கிணறு ஒன்றிலிருந்து 44 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்நாட்டுத் தடயவியலாளர்களால் இவை மீட்கப்பட்டுள்ளன.
அதேவேளை கறுப்புப் பைகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், குவாடலஜாரா என்னும் நகருக்கு வெளியே 119 மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
துர்நாற்றம் வீசுவதாக பிரதேச மக்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இம்மாத ஆரம்பத்தில் இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #மெக்ஸிகோ #கிணறு #உடல்கள் #மீட்பு
Spread the love