238
மயூரப்பிரியன்
யாழில் உள்ள பிரபல பாடசாலைகள் அதிபர்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து வருகை தந்த அதிகாரிகள், இன்று புதன்கிழமை பாடசாலை அதிபர்களைக் கைது செய்தனர்.
பாடசாலை மாணவர் அனுமதிக்கு கையூட்டுப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் புலன் விசாரணைகளை முன்னெடுத்த இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாட்டுதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, அந்தப் பாடசாலையின் அதிபர்களை இன்று கைது செய்தது. #யாழ் #பாடசாலை #அதிபர்கள் #கைது #கையூட்டு
Spread the love