189
மயூரப்பிரியன்
அகில இலங்கை பாடசாலைகளுக்கு தேசிய மட்ட கணித புதிர் போட்டியில் கனிஸ்ட பிரிவில் வடமாகாண அணி முதலாமிடத்தைப் பெற்றுள்ளனர். அகில இலங்கை பாடசாலைகளுக்கு தேசிய மட்ட கணித புதிர் போட்டி இன்று வியாழக்கிழமை கொழும்பு மிபேயிலில் நடைபெற்றது.
கனிஸ்ட பிரிவினருக்கான போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஜி.சாகித்தன், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் எம். ஜதுர்சன், ஜெ.லிவிந், கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் வி.தணிகைக்குமரன், வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி பி.சர்றினி, அருணோதயக் கல்லூரி மாணவன் எம். அபிசயன், யாழ் இந்துக் கல்லூரி மாணவன் எஸ். அபிசைசன், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் கபிநயன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது. இதில் இரண்டாம் இடத்தை கிழக்கு மாகாணமும், மூன்றாம் இடத்தை மேல் மாகாணமும் பெற்றனர். #தேசியமட்ட #கணித #புதிர்போட்டி #வடக்குமாகாணம்
Spread the love