சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஆண்டின் அதிசிறந்த வீரருக்கான விருதை ஆர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸி ஆறாவது தடவையாக கைப்பற்றியுள்ளார்.
சர்வதேச மற்றும் கழகமட்ட போட்டிகளில் சிறந்து விளையாடிய கால்பந்தாட்ட வீரர்களை கௌரவிப்பதற்கான வருடாந்த விருது வழங்கும் விழா இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்றது.
இதன்போது ஆண்டின் அதிசிறந்த வீரருக்கான விருதுக்காக போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரெஞ்ச் அணியின் கைலியன் இம்பாப்பே ஆர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தது
இந்தநிலையில் சர்வதேச மற்றும் கழகமட்ட போட்டிகளில் அதித ஆற்றலை வெளிப்படுத்தியமைக்காக ஆண்டின் அதிசிறந்த வீரர் விருது லயனல் மெஸ்ஸிக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதை மெஸ்ஸி வெற்றிகொள்ளும் ஆறாவது சந்தர்ப்பம் இதுவென்பதுடன் இறுதியாக 2015 ஆம் ஆண்டு இந்த விருதை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இதேவேளை, ஆண்டின் அதிசிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருதை அமெரிக்காவின்மேகன் றபினோ கைப்பற்றியுள்ளார் #மெஸ்ஸி #ரொனால்டோ