இந்த நிலையில் ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு உள்ள மன்மோகன்சிங், ப.சிதம்பரம் தொடர்ந்து காவலில் இருப்பது கவலை அளிக்கிறது. இந்த வழக்கில் நீதிமன்றங்கள் நீதியை நிலை நாட்டும் என தாங்கள் உறுதியுடன் எதிர்பார்த்து இருப்பதாகவும், இந்திய அரசினுடைய அமைப்பில் தனி நபரால் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது. அனைத்து முடிவுகளும் ஒருங்கிணைந்த முடிவுகள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசின் 6 செயலாளர்கள் உள்பட உள்ளிட்ட 12 அதிகாரிகள் ஆய்வு செய்து ஒருமனதாக பரிந்துரை செய்ததை ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்து இருக்கிறார். அதிகாரிகள் தவறு இழைக்கவில்லை எனும் பட்சத்தில் அந்த பரிந்துரைகளுக்கு வெறும் ஒப்புதல் மட்டுமே அளித்த அமைச்சர் குற்றம் செய்தவராக குற்றம் சாட்டுவது புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது, ஒப்புதல் வழங்கியதற்கு அமைச்சர் மட்டும்தான் பொறுப்பு என்றால் அது அரசின் ஒட்டுமொத்த அமைப்பையே தகர்த்து விடும் என மன்மோகன்சிங் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.