இலங்கையை சேர்ந்த பிரித்தானிய பிரஜை மலேசியாவில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவரது குடும்பத்தவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரித்தானிய பிரஜையான 40 வயதுடைய ஜனார்த்தனம் விஜயரட்ணம் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி அதிகாலையில், அவரது மலேசிய அண்ணி மற்றும் ஒரு மலேசிய நபருடன், சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவர்கள் பயணித்த காரை காவற்துறையினர் துரத்திச் சென்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இவர்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், அப்போது அவர் தனது மனைவி மற்றும் ஐந்து, 10 மற்றும் 17 வயதுடைய மூன்று குழந்தைகளுடன் விடுமுறையில் இருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மலேசியாவில் விடுமுறையில் இருந்த பிரித்தானிய பிரஜை காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, அவரது மனைவியும் அதே நேரத்தில் காணாமல் போனார். இது குறித்து மலேசிய காவற்துறைஉரிய பதில்களைக் வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரியுள்ளனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பந்தர் கவுண்டி ஹோம்ஸின் டவுன்ஷிப்பில் இவர்கள் பயணித்த காரை தடுத்து நிறுத்த உத்தரவிட்டதாகவும் அந்த உத்தரவு புறக்கணிக்கப்பட்ட நிலையில் புறக்கணிக்கப்பட்டது, அவர்கள் நான்கு மைல் 7 கிலோ மீற்றர் தூரம் கார் துரத்தப்பட்ட நிலையில், காரில் இருந்த நபர் ஒருவர் காவற்துறையினரை நோக்கி சுட்டதாகவும் மலேசிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் ஊடகங்களுக்கு விடுக்கப்பட்ட ஒரு அறிக்கையில், மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை சிலாங்கூர் காவற்துறையின ர் உறுதிப்படுத்தினர், எவ்வாறாயினும், மலேசிய காவற்துறையினரின் குற்றச்சாட்டுக்களை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மறுத்துள்ளனர். அத்துடன் மலேசிய காவல்துறையினரால் அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதா என மலேசியாவின் மனித உரிமைகள் ஆணையம் விசாரித்து வருகிறது.
“08” கொள்ளைக் குழுவின் உறுப்பினர்களான மலேசியாவைச் சேர்ந்த தவசெல்வன் கோவிந்தசாமி மற்றும் மகேந்திரன் சந்திரா சேகரன் ஆகியோருடன் மூன்றாவது, பிரித்தானியாவில் வசிக்கும் ஜனார்த்தனன் விஜயரத்னம், ஆகியோரை மலேசிய காவற்துறையினர் பெயரிட்டுள்ளனர். இதில் ஜனார்த்தனன் விஜயரத்னம், அவரது விசாவை விட அதிக நாட்கள் மலேசியாவில் தங்கி இருந்ததாக அவர்கள் கூறினர்.
எனினும் விஜயரத்னத்தின் குடும்பத்தினர், முக்கிய உண்மைகள் மறைக்கப்படுவதாக காவற்துறையினரின் குற்றச்சாட்டுக்களை கடுமையாக எதிர்த்துள்ளதாக, குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஸ்ட்ட மனித உரிமை வழக்கறிஞர் பொன்னுசாமி உதயகுமார் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தனிநபர்கள் மீது ஏற்படுத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள், குறிப்பாக அவர்கள் மூவரும், மார்பிலும், ஒருவர் தலை மற்றும் மார்பிலும் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகள் ஒரு மரணதண்டனைக்கு ஒப்பானது என தெரிவித்துள்ளார்.