கடந்த 3 ஆண்டுகளில் 7,512 குழந்தைகளை புகையிரத காவல்துறை மீட்டுள்ளது என தமிழக புகையிரத காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்
நேற்று செவ்வாய்க்கிழமை சென்னை பூங்கா நகரில் உள்ள தெற்கு புகையிரத அலுவலகத்தில் நடைபெற்ற புகையிரதங்கள் மற்றும் புகையிரத நிலையங்களில் குழந்தைகளைப் பாதுகாத்தல் தொடர்பாக புகையிரத பாதுகாப்பு படை மற்றும் தமிழக புகையிரத காவலர் ஆகியோருக்கு ஒருநாள் சிறப்பு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர் ஒவ்வொரு ஆண்டும் காணாமல் போகும் 1,500 குழந்தைகளில் 40 குழந்தைகளின் நிலை என்ன ஆகிறது என்பதனை தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு குழந்தைகளை சுற்றிய குற்றங்கள் இருக்கின்றன. எனவே, குழந்தைகளை அவசியம் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில் 7,512 குழந்தைகளை தமிழக புகையிரத காவல்துறை மீட்டுள்ளது. அதில் 699 பேர் பெண் குழந்தைகள் என அவர் தெரிவித்துள்ளார். # குழந்தைகள் #மீட்கப்பட்டுள்ளனர் #தமிழக