கேரள முதல்வர் பினராயி விஜயனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையேயான முல்லைப் பெரியாறு, பரம்பிகுளம் – ஆழியாறு நதிநீரைப் பங்கிட்டுக்கொள்வது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.
இதுதொடர்பாக கேரள முதல்வரும் தமிழக முதல்வரும இன்று (செப்டம்பர் 25) நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் விருந்தினர் மாளிகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், நதிநீர் தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இறுதியாக கடந்த 2004ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் நதிநீர் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததன் பின்னர் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இரு மாநில முதல்வர்களும் நதிநீர் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #கேரள #தமிழக #முதல்வர்கள் #சந்திப்பு #ஜெயலலிதா