பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்திற்கமைய நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முப்படையினரை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வர்த்தமானி அறிவித்தலின்படி அனைத்து மாவட்டங்கள் மற்றும் அதனை அண்மித்த உள்ளூர் நீர்நிலைகளிலும் பொது ஒழுங்கை பாதுகாக்க முப்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த வர்த்தமானி அறிவித்தல் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #முப்படையினரை #பாதுகாப்பு #வர்த்தமானி #வெளியீடு