நீதிமன்ற உத்தரவை மீறி முல்லைத்தீவு ராஜமஹா விஹாரையின் விஹாராதிபதியின் சடலத்தை நீராவியடி பிள்ளையார் கோவிலின் தீர்த்தகேணிக்கு அருகில் தகனம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாண சட்டத்தரணிகள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமக்கு நியாயத்தை கோரி சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்த வடமாகாண ஆளுநர் இதனை தெரிவித்துள்ளார்.
தேரரின் சடலத்தை ஆலய வளாகத்தில் தகனம் செய்யாது அதனை அருகில் உள்ள இராணுவ முகாம் காணியில் தகனம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் இதனை இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்த ஆளுநர், ஆனால் தேரரின் உடல் கோயிலை அண்மித்து தகனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் எனவும் துறவிகள் தர்மம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்த ஆளுநர் தாம் எற்றுக்கொண்ட பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றாமை ஜனநாயக விரோத செயல் எனவும் தெரிவித்துள்ளார். #அரசியல்வாதிகள் #அரசியல் #துறவிகள் #தர்மம் #நீராவியடிபிள்ளையார்
1 comment
அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும்.
ஆளுநர் தன் வேலையை பார்க்க வேண்டும்.
துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்.