165
தியாக தீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை 10.48 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டின்,அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம் பெற்றது. குறித்த நினைவேந்தல் நிகழ்வின் போது தியாக தீபம் திலீபனின் படத்துக்கு பொதுச்சுடர் மற்றும் மலர் மாலை அணிவிக்கப்பட்டது அக வணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அங்கு வந்திருந்தவர்களும் திலீபனின் நினைவு படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மதத்தலைவர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் உயிரிழந்த போராளிகளின் உறவுகள், என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. #தியாகதீபம் #திலீபனின் #நினைவேந்தல்
Spread the love