167
சட்டத்தை மதிக்காதவர்கள் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.சட்டத்திற்கு எதிராக செயல் பட்டவர்கள் எங்களுடைய புனிதத்தின் தன்மையை கெடுத்துள்ளனர் என மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவ சிறி மஹா தர்மகுமார குருக்கள் தெரிவித்தார்.
மன்னாரில் இன்று வியாழக்கிழமை(26) காலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,,
செம்மலைச் சம்பவமானது இந்து மக்கள் மத்தியிலே பெறும் அதிர்ப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது.அண்மையில் செம்மலையில் இடம் பெற்ற சம்பவம் எம் சமூகத்தை மிகவும் கேவலமான ஒரு நிலைக்கு இட்டிச் சென்றிருப்பதாகவே நாம் கருதுகின்றோம்.
ஏன் என்றால் இன்றைக்கு நீதிமன்றத்தின் கட்டளையையும் மீறி அடாவடித்தனமாகவும்,அங்கே சட்டத்தரணிகள் தாக்கப்பட்ட சம்பவம் மோசமானது.
மிகவும் ஒரு மோசமான நிலையை குறித்த சம்பவம் ஏற்படுத்தி இருக்கின்றது.சட்டத்தை மதிக்காதவர்கள் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.
சட்டத்திற்கு எதிராக செயல் பட்டவர்கள் எங்களுடைய புனிதத்தின் தன்மையை கெடுத்துள்ளனர்.சைவ சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு என சில மத அனுஸ்தானங்கள், மத வழிபாடுகளும் இருக்கின்றது.
அவற்றை திட்டமிட்டு சீரலிப்பது போல புனித தீத்தக்கரை அருகே புத்த பிக்குவினுடைய உடல் தகனம் செய்யப்பட்ட சம்பவமானதுஎமது இந்து சமூகத்தினுடைய அனுஸ்தானங்களையும், புனிதங்களையும் மிதிக்கின்ற ஒரு செயலாகவே நாம் கருதுகின்றோம்.
இதற்கு மன்னார் மாவட்ட இந்துக்குருமார் பேரவை சார்பாகவும், மன்னார் மாவட்ட இந்து மகா சபை சார்பாகவும், இந்து ஆலயங்களின் ஒன்றியம் சார்பாகவும் எமது கண்டனங்களை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
இவ்வாறான சம்பவங்கள் இனி இலங்கைத் திருநாட்டிலே இடம் பெறக்கூடாது.இலங்கை ஒரு ஜனநாயக சோசலிசக் குடியரசு என்ற பெயரிலே இருக்கின்றது.
ஆனால் சட்டம் மீறப்பட்டுள்ளது.ஜனநாயகம் மீறப்பட்டுள்ளது. மீறப்பட்டுள்ள ஜனநாயகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியாக ஒரு தீர்வாக அமைய வேண்டும்.இனி வரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெறாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டியது இந்த நாட்டினுடைய தலைமைகளினுடைய மிக மிக பொறுப்பான கடமையாக இருக்கின்றது என்பதனை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
எங்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். இந்துக்கள் இந்த மண்ணிலே வாழ்வதற்கு தகுதியற்றவர்களா?அப்படி என்றால் எங்களை நாடு கடத்துங்கள்.
ஏன் என்றால் இப்படியாப்பட்ட சூழ்நிலையில் நாங்கள் பல்வேறு பட்ட சவால்களுக்கு முகம் கொடுத்துக்கொண்டு இருக்கின்ற சூழ்நிலையிலே எமது சமூகம் தொடர்ந்தும் அடக்கப்படுவதும், ஒடுக்கப்படுவதுமான செய்தி எமக்கு வேதனையளிக்கின்றது.குறித்த சம்பவத்தை நாங்கள் வண்மையாக கண்டிக்கின்றோம் என தெரிவித்தார்.குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இந்து ஆலயத்தின் தலைவர் வைத்தியகலாநிதி மூ.கதிர்காமநாதன்,மன்னார் மாவட்ட இந்து மகா சபையின் தலைவர் இ.இராமக்கிருஸ்ணண் ஆகியோர் கலந்துகொண்டு தமது கண்டணங்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #இலங்கை #ஜனநாயக #சட்டம் #ஜனநாயகம் #செம்மலை
Spread the love