170
எதிர்வரும் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று இடம்பெறுகின்றது.
இன்று தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் அடுத்த மாதம் 4 ஆம் திகதி தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் உண்டு என தேர்தல் அணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
காலி மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் இதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில் வாக்களிப்பதற்காக தேசிய அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணைக்குழு அனுமதித்துள்ள அடையாள அட்டையை எடுத்துச்செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #எல்பிட்டிய #பிரதேசசபை #வாக்களிப்பு
Spread the love