நைஜீரியாவில் சித்திரவதை மையம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதனையடுத்து அங்கு அதிர்வலைகள் தோன்றியுள்ளன.
நாட்டின் வடக்கு பகுதியிலுள்ள நகரான காடுனாவில் இருக்கும் பெரியதொரு கட்டடத்தில் அமைந்துள்ள இந்த சித்திரவதை முகாமிலிருந்து சுமார் 500 பேரை மீட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அங்குள்ள ஆண்களும், சிறுவர்களும் சங்கிலிகளால் கட்டி வைக்கப்பட்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாங்கள் சிததி;ரவதை செய்யப்பட்டதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு பட்டினி போடப்பட்டதாகவும், மீட்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவொரு குரான் கற்றுக்கொடுக்கும் பள்ளி எனத் தெரிவித்து தாங்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக மீட்கப்பட்ட சில குழந்தைகள் தெரிவித்துள்ள அதேவேளை அதுவொரு பள்ளியாக இருந்ததற்கான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #நைஜீரியா #சித்திரவதைமையம் #மீட்பு