எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்குமிடையில் நேற்றையதிம் இடம்பெற்ற சந்திப்பு இணக்கமின்றி நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவும் சுதந்திரக்கட்சியும் இணைவு குறித்து பேசப்பட்டது.
எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சுதந்திரக் கட்சயானது பாரம்பரியம் வாய்ந்ததாகும். ஆகவே அக்கட்சியின் தனித்துவங்களை விட்டுக் கொடுக்க முடியாது எனவும் ஜனாதிபதித் தேர்தலில் கை அல்லது வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதே பொருத்தமாதனது என வலியுறுத்தியுள்ளார்.
எனினும் மகிந்த தரப்பினர் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதே சிறந்ததென வலியுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் எனினும் நாளைய தினம் நடைபெறும் சுதந்திரக் கட்சியின் மத்திய குழுகூட்டத்தின் பின்னரே அடுத்த கட்ட விடயங்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. #மைத்திரி #மகிந்த #சந்திப்பு #இணக்கமின்றி #நிறைவு