முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட சில தரப்பினருக்கு எதிராக பல்வேறு தரப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மனுக்கள் பரிசீலனையை நிறைவு செய்த எழுவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் குறித்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த மனுக்கள் உயர்நீதிமன்ற எழுவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் கடந்த 26 ஆம் திகதி பரிசீலிக்கப்பட்டு நிறைவு செய்த நிலையில், இந்த உத்தரவு இன்று (02) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியலால் தசாநாயக்க ஆகியோர், குறித்த மனுக்களுக்கு எதிரான ஆட்சேபனை மனுக்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.