169
மயூரப்பிரியன்
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஒரு கிலோ நிறையுடைய வெடிமருந்து பொதிகள் நான்கு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. இந்த தகவலை வடக்கு பிராந்திய கடற்படை தலைமையகம் அறிவித்துள்ளது.
வெடிமருந்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
எனினும் கடற்படையினரால் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் வெடிமருந்து பொதிகள் யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் இன்று காலை வரை ஒப்படைக்கப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.–
Spread the love