ஹொங்ஹொங்கில் இடைவிடாது தொடர்ந்த போராட்டத்தில் காவற்துறையினர் மீது போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதட்டம் நிலவியது. ஹொங்ஹொங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரணை செய்யும் விதமாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹொங்ஹொங் நிர்வாகம் முடிவு செய்தது.
இந்தச் சட்ட திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து மசோதா கைவிடப்பட்டது. ஆனாலும், ஹொங்ஹொங்கின் தன்னாட்சியில் சீனா தலையிடுவதை நிறுத்துதல், சுதந்திரமாக தேர்தல், போராட்டக்காரர்களை தாக்கிய காவற்துறையினர் மீது விசாரணை மேற்கொள்ளுதல், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள போராட்டக்காரர்களை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்தல் போன்ற கோரிக்கைகளுடன் நான்கு மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்கள் தங்கள் அடையாளங்களை காவற்துறையினர் கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக முகங்களில் முகமூடி அணிந்துகொண்டு போராடி வருகின்றனர்.