158
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரையில் வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றது. அதனடிப்படையில் 35 பேர் 2019 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலிற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.41 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையில் அதில் 35 பேர் மாத்திரமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனு தாக்கல் செய்யப்படவுள்ள காரணத்தினால் ராஜகிரிய மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் வாகன போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love