இந்தியப் பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருக்கிறது. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், விரைவில் அது மீண்டு எழும் என்று உறுதியாக கூற முடியாது என நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்கவாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொல்கத்தாவை சேர்ந்த ஊடகம் ஒன்று, அமெரிக்காவில் உள்ள அபிஜித் பானர்ஜியிடம் மேற்கொண்ட செவ்வியின்போது, இந்திய பொருளாதாரம் குறித்து கருத்து வெளியிட்ட அவர்,
இந்திய பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருக்கிறது. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், விரைவில் அது மீண்டு எழும் என்று உறுதியாக கூற முடியாது. கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளில் சில வளர்ச்சி கணப்பட்டது ஆனால், இப்போது அந்த உறுதிப்பாடும் அற்றுப்போனது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தனக்கு இவ்வளவு சீக்கிரம் நோபல் பரிசு கிடைக்கும் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும் கடந்த 20 ஆண்டுகளாக வறுமை ஒழிப்புக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக வும் குறிப்பிட்டுள்ளார்.