ஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுவின் தலைவர் தாக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சிவில் மனித உரிமை முன்னணி என்ற குழுவின் தலைவரான ஜிம்மி ஷாம் என்பவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்
நாடாளுமன்றத்தில் இடையூறு மேற்கொள்ளப்பட்டதனையடுத்து ஹொங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் மேற்கொள்ளவிருந்த ஆண்டு கூட்ட உரை ரத்து செய்யப்பட்ட பின்னர் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஹொங்கொங்கிற்கு அதிக ஜனநாயக உரிமைகளை வழங்க வேண்டும் எனக் கோரி, கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பெருதிரள் மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் கவுலூன் தீபகற்பத்தின் மோங் கோக் மாவட்டத்தில் சுத்தியல்களோடு வந்த ஐந்து ஆண்கள், ஜிம்மி ஷாமை தலையில் தாக்கியதாக சிவில் மனித உரிமை முன்னணி தெரிவித்துள்ளது. மேலும் அவரது உடல் நிலை, தற்போது சீராக இருப்பதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது
ஹொங்கொங்கில் இந்தப் போராட்டங்கள் ஆரம்பித்த பின்னர், ஜிம்மி ஷாம் தாக்கப்படுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. #ஹொங்கொங் #ஜனநாயக #தாக்குதல் #மருத்துவமனை