மலேசியாவில் ஆளும் கூட்டணியின் முக்கிய உறுப்புக் கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் சிரேஸ்ட தலைவர் லிம் கிட் சியாங், விடுதலைப்புலிகள் விவகாரத்தில் பொய்யான செய்திகள், ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாத புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றைக் கொண்டு தங்கள் கட்சி மீது பழிசுமத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல், விடுதலைப் புலிகள் ஆகிய சர்வதேச சதிகாரர்களுடன் ஜனநாயக செயல் கட்சிக்கும் தொடர்புள்ளது என்று மலேசிய எதிர்க்கட்சியான ‘பாஸ்’ தெரிவித்துள்ள குற்றச்சாட்டு ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் கடந்த 2012ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை உதவித் தொகையாக வழங்கியதனைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அப்படியானால் நஜிப்பும் கூட விடுதலைப் புலிகளின் ஆதரவாளரா? என தமது சமூக வலைத்தளப் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.