193
இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஐவர் தலைமன்னார் பியர் இறங்குதுறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக நாடு திரும்பியவர்களை நேற்று கைது செய்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. சந்தேகநபர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பேசாலை, யாழ்ப்பாணம், தலைமன்னார் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளை சேர்ந்த 29 முதல் 49 வயதுக்கிடைப்பட்டவர்களே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
Spread the love