ஈரான் கடந்த வருடம் மட்டும் 7 சிறுவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியதாக ஐ.நா. சபை தகவல் வெளியிட்டு உள்ளது.
உலகம் முழுவதும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது சர்வதேச மனித உரிமை சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் ; இதனை மீறி ஈரான் கடந்த வருடம் மட்டும் 7 சிறுவர்களை தூக்கில் போட்டு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளதாக ஐ.நா. சபைக்கான ஈரானின் மனித உரிமை விசாரணையாளர் ஜாவீத் ரஹ்மான், ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தில் தெரிவித்துள்ளார்.
இது நம்பகரமான தகவல் எனவும் ஈரானில் தற்போது சுமார் 90 சிறுவர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் உலக நாடுகளில் ஈரானில்தான் மரண தண்டனைகள் அதிகமாக நிறைவேற்றப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
ஈரானில் நடக்கும் மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகங்கள் கண்டுகொள்ள வேண்டும் என அந்நாட்டின் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது #ஈரான் #சிறுவர்களுக்கு #மரண தண்டனை #ஐ.நா