ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இதேபோன்று நடைபெற்ற போராட்டங்களின்போது ஈராக் முழுவதும் சுமார் 150 பேர் உயிரிழந்திருந்தனர். அவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் ராணுவம் மற்றும் அரச அலுவலக கட்டடங்களுக்குள் நுழைய முற்பட்டபோது உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
போரால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகள் வேண்டும், ஊழல் ஒழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி அங்கு மக்கள் போராடி வருகின்றனர்.
அத்துடன் மத உள்பிரிவுகளின் அடிப்படையில் அதிகாரம் பகிர்ந்துகொள்வதை ஷியா முஸ்லிம்கள் தலைமை வகிக்கும் அரசு நீக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதேவேளை போராட்டங்களை கட்டுப்படுத்த அளவுக்கும் அதிகமான படைகளை அதிகாரிகள் பயன்படுத்தியதை ஈராக் அரசு ஒப்புக்கொண்டுள்ள நிலையில் அந்நாட்டு மதகுருக்களும், ஐக்கிய நாடுகள் சபையும் வன்முறைகளைக் கைவிட அனைத்து தரப்புகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர். #ஈராக் #அரசுக்கெதிரான #போராட்டங்கள் #வன்முறை #பலி