கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ மற்றும் பெருங்காற்று மேலும் பல இடங்களுக்கு பரவலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதை அடுத்து அந்தப் பகுதியில் இருக்கும் மக்களை வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வடக்கு சான்பிரான்ஸிகோவில் உள்ள 50 ஆயிரம் மக்களையே இவ்வாறு வேறு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அந்தப் பகுதிகளுக்கு மின்சார வசதியினை வழங்கி வரும் பசிபிக் காஸ் மற்றும் மின்சார நிர்வாகம், அடுத்த 48 மணி நேரத்திற்கு மின்சாரத்தைத் துண்டிக்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில் இதன் காரணமாக 20 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்த காட்டுத்தீயின் காரணமாக 10,300 ஹெக்டேர் பரப்பளவிலான காடு எரிந்து அழிவடைந்து உள்ளது. கடந்த வருடம் கலிபோர்னியாவில் காட்டுத்தீ ஏற்பட்டதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு காலநிலை மாற்றத்துக்கும் காட்டுத்தீக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது #கலிபோர்னியா #காட்டுத்தீ #california #வெளியேற்றம்