பொதுஜன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தாபய ராஐபக்சவின் யாழ் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்காக கோத்தாபய மற்றும் மகிந்த ராஐபக்ச உள்ளிட்ட பலரும் இன்று யாழ்பபாணத்திறகு பயணம் செய்தனர்.
இந் நிலையில் யாழ் சங்கிலியன் பூங்கா முன்பாக ஒன்று திரண்ட காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோத்தாபயவிற்கு எதிர்ப்பைத் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன் போது கோத்தாபயவே வெளியேறு, காணாமலாக்கப்பட்ட உறவுகள் எங்கே, வெள்ளை வான் முதலாளி கோத்தாபயவே வெளியேறு, எமது மக்களை கடத்தாதே, போர்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து, இனப்படுகொலையாளி மகிந்த, கோத்தாவை கைது செய், பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்து உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்தனர்.