யாழில்.பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெற்றது. யாழ். றக்கா வீதியில் அமைந்துள்ள இளங்கதிர் சனசமூக நிலைய மைதானத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் குறித்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன், வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதல்வர் வரதராஜப்பெருமாள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Spread the love
Add Comment