184
தலைமன்னாரில் இருந்து இன்று(30) புதன் கிழமை காலை 7.10 மணியளவில் மதவாச்சியூடாக கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மோதி 4 மாடுகள் உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி இசைமாளத்தாழ்வு பகுதியில் இன்று புதன் கிழமை (30)காலை 8.25 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
தலைமன்னார் புகையிரத நிலையத்தில் இருந்து இன்று புதன் கிழமை காலை 7.10 மணியளவில் குறித்த புகையிரதம் பயணித்துள்ளது.இதன் போதே மன்னார்-மதவாச்சி பிரதான வீதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
விபத்தை தொடர்ந்து புகையிரதம் நிறுத்தப்பட்டு பின் மீண்டும் பயணிகளுடன் மதவாச்சி நோக்கி சென்றது.
தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதத்தில் தொடர்ச்சியாக மாடுகள் மோதி உயிரிழக்கும் சம்பவம் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. #மன்னார் #புகையிரதம் #மாடுகள்
Spread the love