அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை பதவி நீக்குவது தொடர்பான நடைமுறைகளை ஆரம்பிக்கும் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் நிறைவேறியுள்ளது,
டிரம்பின் பதவி நீக்கம் தொடர்பான விசாரணை படிப்படியாக எவ்வாறு வெளிப்படையாகும் என நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
எனினும் டிரம்ப் பதவியில் இருந்து நீக்கப்படுவது பற்றிய வாக்கெடுப்பு அல்ல இது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கு ஜனநாயக கட்சியினரால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள அவையில் ஆதரவு கிடைக்கும் என்பதை காட்டுக்கின்ற முதல் சோதனை முயற்சி இதுவாகும் என்னும் நிலையில் கட்சி கொள்கை வழிமுறையில் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்புக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.
விசாரணை நடைமுறைகளை ஆரம்பிக்க ஆதரவாக 232 பேரும், எதிராக 196 பேரும் வாக்களித்துள்ளனர்.
அமெரிக்காவின் உளவுப்பிரிவைச் சேர்ந்த ஒருவர், டிரம்ப் உக்ரைன் நாட்டை சேர்ந்த அரசியல் தலைவரான ஜெலன்ஸ்கியுடன் தொலைப்பேசி உரையாடல் மேற்கொண்டதாக முறைப்பாடு செய்ததனையடுத்து இந்த சர்ச்சை எழுந்திருந்தது. தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள டிரம்ப், ஜனநாயக கட்சியினரின் முயற்சிகளை குப்பை என வர்ணித்துள்ளார்.
டிரம்பை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு ஜனநாயக கட்சியினர் மத்தியில் பலத்த ஆதரவு இருந்தாலும், குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள செனட் சபையில் இது தொடர்பாக ஒப்புதல் கிடைக்காது என்றே தெரிவிக்கப்படுகின்றமை குறிப்படத்தக்கது. #டிரம்ப் #பதவிநீக்குவது #நிறைவேற்றம்