பிரேசிலில் உள்ள அமேசன் காடுகளில் நிலத்துக்காகப் போராடிவந்த இளம் பழங்குடி செயற்பாட்டாளர் ஒருவர் சட்டவிரோதமாக செயல்படும் மரம் வெட்டும் கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மரான்ஹூ மாகாணத்தில் உள்ள அராரிபோ என்ற பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பழங்குடி பிரிவைச் சேர்ந்த பௌலோ பௌலினோ குவாஜஜ்ரா வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தாக்குதலுக்கு உள்ளாகி தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்
அராரிபோ வனப்பகுதியில் சட்ட விரோதமாக மரம் வெட்டுபவர்களை தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட கார்டியன்ஸ் ஒப் த பொரஸ்ட் என்ற வன பாதுகாப்பு குழுவில் பௌலோ உறுப்பினராக இருந்துள்ளார்.
இவ்வாறு பௌலோ கொலை செய்யப்பட்டமை அமேசன் காடுகளை பாதுகாக்க போராடும் பாதுகாவலர்களுக்கு எதிராக வன்முறை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #அமேசன் #நிலத்துக்காக #போராடி #செயற்பாட்டாளர் #சுட்டுக்கொலை