யாழ்.மாநகர சபையின் நகர மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருகை தந்தவர்களை வரவேற்கும் செலவாக 8 லட்சத்து 47 ஆயிரத்து 895 ரூபா 48 சதம் ஏற்பட்டுள்ளதாக யாழ்.மாநகர சபை காணக்கிட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் நகர மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது.
குறித்த விழாவுக்கு வருகை தந்தோருக்கான சிற்றூண்டி மற்றும் தண்ணீரிற்காக 2 லட்சத்து 27 ஆயிரத்து 200 ரூபாவும், மதிய போசணமும் அதனுடன் இணைந்த தண்ணீர்ச் செலவிற்காக 4 லட்சத்து 85 ஆயிரத்து 475 ரூபா 48 சதமும், ஏற்பட்டுள்ளது.
அத்துடன் விருந்தினர்களுக்கான மாலை செலவு , மங்கள வாத்திய செலவு , வரவேற்பு நடன செலவு உள்ளிட்ட ஏனைய செலவுகளாக ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 895 ரூபா 48 சதம் ஏற்பட்ட வகையிலேயே மொத்தம் 8 லட்சத்து 47 ஆயிரத்து 895 ரூபா 48 சதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. #யாழ்.மாநகரசபை #அடிக்கல்நாட்டுவிழா