156
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டம், முல்லைத்தீவு முள்ளியவளை விநாயகர் விளையாட்டு மைதானத்தில் இன்று இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், மைதானம் மற்றும் முள்ளியவளை தொடக்கம் முல்லைத்தீவு வரையான வீதிகளில் காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சோதனைகளின் பின்னரேயே மக்கள் மைதான வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #முல்லைத்தீவு #விசேடஅதிரடிப்படையினர் #பாதுகாப்பு #சஜித்
Spread the love