151
புலம்பெயர்ந்த தமிழர்கள் ஈழக் கனவை கைவிட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அவர்கள் தற்போது வடக்கு அபிவிருத்திக்கு ஒத்துழைக்க தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அவர்,
அண்மையில் தான் பிரான்சுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதாகவும் அந்த சந்தர்ப்பத்தில் அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் பலரை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.
அந்த சந்திப்பின் போதே அவர்கள் மேற்குறிப்பிட்ட கருத்தை தெரிவித்ததாகவும் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மேலும் தெரிவித்துள்ளார்.
Spread the love