(க.கிஷாந்தன்)
தொழிலாளர்களை தொடர்ந்தும் நான் தொழிலாளராக வைத்து கொள்ள விரும்பவில்லை நீங்களும் தேயிலை தோட்ட உரிமையாளராக வேண்டும். மலையகத்தில் வாழுகின்ற மக்களுக்கும் அடிப்படை தேவைகள் எதுவுமே இதுவரை பூர்த்தியாகவில்லை முறையான முன்பள்ளி பாடசாலை இல்லை முறையான மண்டபங்கள் இல்லை முறையான சுகாதார நிலையங்கள் இல்லை முறையான பாடசாலைகள் இல்லை இன்னும் பல தேசிய பாடசாலைகள் நாம் பெற்று கொடுக்க வேண்டும் அதனை நாங்கள் கட்டாயம் பெற்று கொடுப்போம் என புதிய ஜனநயாக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்று (10.11.2019) அன்று தலவாக்கலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ் முற்போக்கு கூட்டணி மேற்கொண்டிருந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த அவர்,
கணிதம் மற்றும் விஞ்ஞான பாடத்திற்கான முறையான ஆசிரியர்கள் இல்லாமையினால் மலையகத்தில் உள்ள மாணவர்கள் பெரிதும் கஷ்டபடுகிறார்கள் கவலைபட வேண்டாம் இவை அனைத்தையும் நான் தீர்த்து வைப்பேன்.
எனது தந்தை ரணசிங்க பிரேமதாச அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது தோட்டத்தில் வாழும் சுமார் 12 லட்சம் பேருக்கு ஒரே நாளில் பிரஜா உரிமை பெற்றுக்கொடுத்தார். அவரது மகனான நான் சஜித் பிரேமதாச ஆகிய நான் எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அடுத்த நாளே மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றினை உருவாக்குவேன்.
நான் மிகவும் அதிஸ்ட்டமானவன் காரணம் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க கூடிய இதய பூர்வமானவர்கள் இன்று என்னுடன் இருக்கிறார்கள. அவர்களிடம் பொய் களவு பண டீல் கிடையாது. அவர்கள் உங்களுக்க நல்லதே செய்ய வேண்டும் என்றே நினைக்கின்றார்கள்.அன்பார்ந்த தோழர்களே உங்களுக்கு நான் ஒனறை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் தோட்டத் தொழிலாளர்களுககாக எனது தேர்தல் விஞ்ஞாபனததில் ஒரு பந்தி உள்ளது.அது மலையக மக்கள் என்றே குறிபபிடப்பட்டுள்ளது.நான் 16 திகதி வெற்றி பெரும் போது 17ம் திகதியே ஜனாதிபதி செயலணி ஒன்றினை உருவாக்கி அதன் ஊடாக உங்களின் அனைத்து பிரச்சினைகளை எனது கையில் எடுத்து தீர்வு பெற்றுக்கொடுப்பேன். ஆகவே என்னால் எம்மை வெற்றிப்பெறச் செய்த என்னாலும் எமக்கு சக்தியாக இருந்து தோட்ட மக்களை நான் கட்டயம் பாரத்துக்கொள்வேன் என அவர் மேலும் தெரிவித்தார். #தொழிலாளர்கள் #உரிமையாளராக #சஜித்பிரேமதாச