ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை தமிழ் மக்களால் விரும்பப்படும் வேட்பாளருக்கே தமிழ் பேசும் யாழ். முஸ்லிம் மக்களாகிய தாமும் ஆதரவு அளித்து ஒத்துழைப்பு வழங்க உள்ளதாக  யாழ்.அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் அனைத்து யாழ்.பள்ளிவாசல் சம்மேளனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

கடந்த ஐந்தாம் திகதி யாழ்.முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசலில் யாழ்.அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.ஏ.சி.முபீன் தலைமையில் நடைபெற்ற சம்மேளனத்தின் நிர்வாகிசபை கூட்டத்தில் இனங்களுக்கிடையிலான சமாதான சமத்துவ புரிந்துணர்வுடன் கூடிய ஐக்கியமான செயற்பாடுகளில் சம்மேளனம் செயற்படவேண்டும் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட சம்மேளனத்தின் நிர்வாகிகளினால் கருத்து வலியுறுத்தப்பட்டது.

மேற்படி கருத்திற்கு இனங்க ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை தமிழ் மக்ளினால் விரும்பப்படும் வேட்பாளருக்கே தமிழ்பேசும் யாழ்.முஸ்லிமக்களாகிய தாமும் ஆதரவு அளித்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும்  என ஏக மனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.